குற்றாலத்தில் 40க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்!!

 
கடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பஜார் பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த கடைகளில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 40க்கும் மேற்பட்ட கடைகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றாலம்

இந்த பயங்கர தீவிபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்,  கடைகளில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  சிலிண்டர் வெடித்ததால் குற்றாலம் பஜார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web