தனியார் தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம்... நிரம்பி வழியும் அரசு தனியார் மருத்துவமனை வார்டுகள்!

 
மருத்துவமனை

 திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பிடிக்கப்பட்ட குடிநீரை பருகிய 50 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கேபேட்டை அடுத்த வேலன்கண்டிகை பகுதியில் ஆடை வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு   வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார்  1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்ற்றனர். இன்று பிற்பகல் உணவுக்கு பிறகு  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரை பருகியுள்ளனர்.

மருத்துவமனை
 அவர்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து   பள்ளிப்பட்டு திருத்தணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து  வழக்கு பதிவு செய்து  காவல்  மற்றும் சுகாதாரத்துறையினரும் இணைந்து சம்பவ இடத்திற்கு சென்று எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மருத்துவமனை
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி இப்பகுதியில் நிகழ்பவை  என்றாலும் தொடர்கதையாகி வருவது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்  திருவள்ளூர் மற்றும் திருத்தணி பகுதிகளில்   பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சுற்றுவட்டார பகுதிகளில் அரசு  மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குடிநீரால் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின்  வருகை அதிகரித்திருப்பதால் மருத்துவமனை வளாகத்திலும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web