800க்கும் மேற்பட்டோர் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!!பரபரக்கும் தலைநகர்!!

 
முற்றுகை

தமிழகத்தில்  5,493 ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டது. இதனையடுத்து  நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ அலுவலகத்தை பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த1000க்கும்  மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை   கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நள்ளிரவு வரை அடைத்து வைத்திருந்தனர்.

முற்றுகை

அனைவரையும் பலத்த பாதுகாப்புடன் கோயம்பேடு பேருந்து நிலையம் அழைத்து சென்று அவரவர் சொந்த ஊர் திரும்பி செல்ல அறிவுறுத்தினர். அத்துடன் அவர்கள்  அனைவரும் பேருந்தில் புறப்பட்டு செல்லும் வரை  போலீஸார்   அங்கேயே காத்திருந்தனர். முதல்வர் எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட 800 பேர் மீது  வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்தப் போராட்டத்தனை   வாட்ஸ் அப் குழு மூலம்  ஒருங்கிணைந்த புதுக்கோட்டை சின்னையன் , திருவண்ணாமலை சுரேஷ்குமார் , திண்டுக்கல் விஜயகுமார் , சென்னை ஜெயகுமார் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

முற்றுகை

 அதே நேரத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேருந்து, ரயில்களில் வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல், எழும்பூர், ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன்   கொளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில்   ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள  மின்வாரிய தலைமை அலுவலகத்தில்  150க்கும் மேற்பட்ட போலீஸார்  குவிக்கப்பட்டுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web