2000ஐ கடந்த பலி எண்ணிக்கை!! திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்!!

 
மொரோக்கோ

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள  குட்டி நாடு தான். மொராக்கோ. இங்கு   நேற்று முன்தினம்   இந்திய நேரப்படி அதிகாலை 3:40 பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவு கோலில் 7.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.  அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது


இதன் பிறகு  19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 புள்ளிகள் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சுற்றுலா நகரமான மராகேஷ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகின. மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் அச்சத்துடன் தஞ்சமடைந்துள்ளனர். பலர் தூக்கத்திலேயே மரணமடைந்தனர்.   மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் தோண்டத் தோண்ட பிணக்குவியல் குவியலாக  மீட்கப்பட்டன.

மொரொக்கோ

 இந்நிலையில் மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2000 பேர்  பலியாகி உள்ளனர்.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.  இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல  உலக நாடுகளின் தலைவர்கள்  இரங்கலை தெரிவித்துள்ளனர்.  க பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள மதீனா என்ற சிவப்பு சுவர்களும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளது.   இதுகுறித்த காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை