உலகிலேயே மிக ஆபத்தான உயிரினம் கொசு தான்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

 
கொசு

உலக சுகாதார அமைப்பு (WHO) உலகிலேயே மிக ஆபத்தான உயிரினமாக கொசுவையே அடையாளம் காட்டியுள்ளது. குறிப்பாக, டெங்கு, மலேரியா போன்ற தீவிர நோய்களை பரப்பும் கொசுக்கள் உலக அளவில் பல லட்சம் உயிர்களை ஆண்டுதோறும் அபாயத்தில் வைக்கும் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, கடந்த சில நாட்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதுடன், டெங்கு நோய்க்கான பாதிப்பும் கவலைக்குரிய அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, கோவை, திருவள்ளூர்  மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கொசு

டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் மழையால் தேங்கியிருக்கும் நீர் நனைந்த இடங்களில் வளர்ச்சி பெற்று விரைவில் பரவும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். டெங்குவுக்கு முக்கிய அறிகுறியாக அதிகமான காய்ச்சல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதோடு வயிற்றுப்போக்கு, ஈறுகளில் ரத்தக் கசிவு போன்ற அறிகுறிகளும் டெங்குவுக்கான சாத்தியங்களை காட்டுகின்றன.

மருத்துவர்கள் மூன்று நாட்கள் மேல் தொடர்ந்து அதீத காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனை அணுக வேண்டியுள்ளதாகக் கூறி இருக்கிறார்கள். முதியோர் மற்றும் குழந்தைகள் போன்ற மோசமான உடல் நலமுள்ளோர் குறிப்பாக கொசுக்களின் தாக்குதலுக்கு ஆளாகாமல் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.

மீண்டும் தலைதூக்கும் ஜிகா பரவஸ்- கொசு தான் காரணமாம்..!!

மேலும், வீட்டின் அருகிலுள்ள பகுதியில் டெங்கு பாதிப்பு இருந்தால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். டெங்கு பாதித்தோர் அதிக அளவில் நீர் மற்றும் பழச்சாறு போன்ற திரவங்களை அருந்தி உடலை ஹைட்ரேட் செய்ய வேண்டும் என்றும் மருத்தவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் 15,796 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 8 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, தமிழக சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.

கொசுக்களை அண்டவிடாமல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றுவதே டெங்கு பரவலைத் தடுக்கும் முக்கியமான வழியாக இருக்கிறது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?