பகீர்... சுய பிரசவம் பார்த்ததில் தாயும், சேயும் பலி!!

 
வசந்தி

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்பது வாக்கு. சென்ற தலைமுறை வரை பிரசவங்கள் வீடுகளில் பார்த்து கொள்வது தான் சௌகர்யம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்து வைப்பர். ஆனால் தற்போது சுயமருத்துவம் விபரீதத்தில் கொண்டு விடும் என்கின்றனர் மருத்துவர்கள் . மாறி வரும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும் என்பதை பலரும் உணர்வதே இல்லை.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

வீட்டில் நடக்கும் பிரசவம், யூடியூப் பார்த்து தனக்குத்தானே பிரசவம் இவைகளால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்  இவரது மனைவி வசந்தி. இவர்கள் கூலித் தொழிலாளிகள் இவர்களுக்கு ஏற்கனவே  5 குழந்தைகள் . உள்ளனர். இந்த நிலையில் வசந்தி நேற்று இரவு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

ஆம்புலன்ஸ்

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.  அதன்படி  வசந்திக்கு  ஏற்கனவே 5 குழந்தைகளை வளர்க்க சிரமம். இதில்  6வதாக கர்ப்பமானார்.  வீட்டிலேயே  சுயபிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து விட்டது.  குழந்தை பிறந்த பிறகு வசந்திக்கு ரத்தப்போக்கு நிற்கவே இல்லை. இதனால் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதில் வசந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.  பின்னர் குழந்தையின் உடல், வசந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம்  குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web