இரட்டை குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை... பெரும் சோகம்!
ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சாய் லட்சுமி (27) என்பவர், ஐதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் அனில் குமார் (30) என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர் — சேதன் கார்த்திகேயா மற்றும் லாஸ்யத வள்ளி (2). இதில் மகனுக்கு பேச்சு தெளிவாக வராததால், அதை மனைவியின் ஜீன் பிரச்சினையாக கூறி, கணவர் அடிக்கடி தகராறு செய்து மானசீக துன்புறுத்தல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மகனுக்கு சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளில் சாய் லட்சுமி சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. இதனால் தம்பதியரிடையே உறவு மோசமடைந்து, மாதக்கணக்கில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் கணவர் விசாகப்பட்டினம் சென்றிருந்த சமயத்தில், மனமுடைந்த சாய் லட்சுமி தன் இரு குழந்தைகளின் முகத்தில் தலையணை வைத்து மூச்சுத்திணறச் செய்து கொன்று, பின்னர் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

அவர் தற்கொலை செய்யும்முன் பெற்றோருக்காக ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார். அதில் “அவர் மாற மாட்டார்… என் பிள்ளைகள் உயிரோடு இருப்பது அவசியமில்லை… மன்னித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார். சம்பவம் குறித்து போலீசார் கணவர் அனில் குமார் மற்றும் அவரது பெற்றோர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
