17 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை... பெங்களூரில் பயங்கரம்!
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது மகளைக் கொன்றுவிட்டுத் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான சுவர்ணா என்ற பெண் தனது மகள் காருண்யாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாயும் மகளும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சனை காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் தற்கொலைக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மகளின் கல்வி மற்றும் குடும்பச் சூழல் குறித்து உறவினர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
