பிள்ளைங்க அநாதையா போச்சே... 3 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை... கதறும் உறவினர்கள்...!!

 
மோனிஷா

வேலூர் மாவட்டம், குடியாத்தம்  சாமியார் மலைப் பகுதியில் வசித்து வருபவர்   தினேஷ். இவர் மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது  மனைவி மோனிஷா. இவர்களுக்கு  ஒரு பெண்  மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் . இந்நிலையில், குடும்ப சூழல் காரணமாக தினேஷ் அதே பகுதியில் வசித்து வரும்  மாலதியிடம்  10 மாதங்களுக்கு முன் ரூ30000க்கு  வட்டிக்குக் கடனாக வாங்கினார். அதன் வட்டி தொகையை பொறுத்தவரை   15 நாட்களுக்கு ஒருமுறை ரூ10   வட்டி என  வாங்கியுள்ளார். 

மோனிஷா


தற்போது வட்டியுடன் மொத்தம் ரூ70000  செலுத்த வேண்டும் என கடன் கொடுத்த மாலதி கூறியுள்ளார். அதில் ரூ30000  பணத்தை தினேஷ் செலுத்தியுள்ளார். ஆனால், பாக்கி ரூ40000 தரச் சொல்லி மாலதி அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.   இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ்
 இந்நிலையில், மாலதியை கைது செய்ய கோரி தினேஷின் உறவினர்கள்  போராட்டம் நடத்தினர். இதனால் காவல்நிலையத்தில் சற்று நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.  போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

From around the web