நெகிழ்ச்சி... ஓநாயின் கழுத்தை நெரித்து 5 வயது மகனை காப்பாற்றிய தாய்!
உலகம் முழுவதும் தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. அதிலும் பிள்ளைக்கு ஒன்று என்றால் எங்கே இருந்து தான் வீரம் வருமோ சிங்கத்தையும் கையாலே கிழித்து எரிந்துவிடுவாள். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் பக்ரீச் பகுதியில் கடந்த சில நாட்களாக ஓநாயின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. மனிதர்களை தின்னும் இந்த ஓநாயால் மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு ஓநாய் தனது தாயின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் பராஸ் என்பவரை கடித்து இழுத்துச் சென்றுவிட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்த சிறுவனின் தாயான குடியா சற்றும் தாமதிக்காமல் ஓநாயின் மீது பாய்ந்து அதன் கழுத்தை இறுக்க தொடங்கினார்.
தனது மகனின் பிடியை ஓநாய் விடும் வரை தனது முழு பலத்தையும் திரட்டி ஓநாயின் கழுத்தை இறுக்கியவர் சிறுவன் கீழே விழுந்ததும் உதவிக்காக ஆட்களை கூக்குரலிட்டு அழைத்தார். மனிதர்கள் கூட்டமாக வரத் தொடங்கியதும் ஓநாய் சிறுவனிடம் இருந்த பிடியை விட்டு விட்டு ஓடியது. இது குறித்து சிறுவனின் தாய் குடியா கூறுகையில் மீண்டும் அந்த ஓநாய் வந்தால் கொன்று விடுவேன் என கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!