மண்ணெண்ணெய் ஊற்றி மகனுடன் தீக்குளிக்க முயன்ற தாய்.. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!!

 
அருக்காணி

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருபவர்   அருக்காணி . இவருக்கும் இவருடைய அக்காவுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இருவருக்குமான பூர்வீக சொத்து திருப்பூர் மாவட்டம்   முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம்  பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மாராத்தாள் மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் அருக்கானிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டனர்.  

அருக்காணி

இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர்  அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்நிலையில்  இன்று மீண்டும் மனு அளிப்பதற்காக அருக்காணியும், அவரது மகன் குப்புசாமியும் திருப்பூர்  கலெக்டர்  அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

அருக்காணி

அப்போது இருவரும்  கலெக்டர்   அலுவலக வளாகத்தில் தங்கள் உடலில் மண்ணெண்ணெய்   ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயற்சித்தனர்.  உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால்  கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web