வாகன ஓட்டிகள் உஷார்... இனி வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்... எப்படி பெறுவது?!

 
இ பாஸ் வாகன சோதனை

வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டை உறுதிசெய்ய நவம்பர் 1ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக அமல்படுத்தப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வால்பாறை பகுதிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயம் இ-பாஸ் பெற்று வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் பெற விரும்புவோர், மாவட்ட நிர்வாகம் உருவாக்கிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும், ஆழியார் மற்றும் சோலையார் சோதனைச் சாவடிகளிலும் நேரடியாக இ-பாஸ் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊட்டியில் குவிகிறது கூட்டம்! இனி நீலகிரி செல்ல இ-பாஸ் அவசியம்!!

இ-பாஸ் இல்லாத எந்த வாகனமும் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படாது. மேலும், சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை கொண்டு வரக் கூடாது என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

சுற்றுலா கட்டுப்பாடு மற்றும் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி துறையினர் இணைந்து சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர்.

வால்பாறை

வால்பாறை பகுதியில் இயற்கை சூழல் சீர்குலையாமல், மலைப் பிரதேச சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்திலேயே இ-பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?