மலை ரயில் சேவை தொடர்ந்து 5வது நாளாக ரத்து!

 
ஊட்டி மலை ரயில் ரத்து!!
 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு, ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கும் இயங்கும் அழகிய மலைரெயில் சேவை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக கடந்த 18ம் தேதி இரவு பெய்த மழையால், மேட்டுப்பாளையம்–ஊட்டி ரயில் பாதையில் கல்லாறு மற்றும் ஹில்குரோவ் நிலையங்களுக்கு இடையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

ஊட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

இதனுடன் பாறைகள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்ததோடு, மரங்களும் வேரோடு சாய்ந்து பாதையில் தடையாக விழுந்தன. இதன் காரணமாக 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நான்கு நாட்களாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சேதமடைந்த பாதையை சீரமைக்கும் பணிகள் ரெயில்வே சீனியர் செக்சன் இன்ஜினீயர் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரயில் மிசோரம்

சேதமடைந்த தண்டவாளங்கள் மற்றும் ராக்பார்கள் அகற்றப்பட்டு புதியவைகள் பொருத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் பணிகள் இன்னும் முழுமையடையாததால், இன்றும் 5-வது நாளாக மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பணிகள் முடிந்தவுடன் மேட்டுப்பாளையம்–ஊட்டி மலைரெயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!