பிரதான சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள்.. கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

 
பாச்சல்

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் புளியங்கோட்டை பகுதிக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலை வழியாக பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும், திருப்பத்தூர் பகுதிக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து அகற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில், குப்பையால் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்வோர், பள்ளி மாணவ, மாணவியர் மூக்கைப் பிடித்துக் கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!