30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்!!

 
எம்.எஸ்.சுவாமிநாதன்

இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை  எம்.எஸ்.சுவாமிநாதன். இவர் உடல் நலக்குறைபாடு மற்றும்  வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செப்டம்பர் 28ம் தேதி காலமானார். அ அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வேளாண் பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சென்னை தரமணியில்  எம்.எஸ். சுவாமிநாதனின் அறக்கட்டளையில் அவரது உடல் செப்டம்பர் 29  காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஸ்டாலின் எம்.எஸ்.சுவாமிநாதன்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.   இன்று எதிர்கட்சித்தலைவர் இபிஎஸ், ஆளுனர் ஆர்.என்.ரவி உட்பட பலர்   எம்.எஸ். சுவாமிநாதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல்  12 மணிக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம் எஸ் சுவாமிநாதன்

இதற்காக தரமணியில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு 11.30 மணியளவில் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.   பெசன்ட் நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு  மொத்தம் உள்ள 16 காவலர்களில் 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web