அதிர்ச்சி... பிரபல நடிகர் மீது கொலைவெறித் தாக்குதல்... கண், மூக்கு, கால்களில் படுகாயம்!!

 
மோகன்சர்மா

பிரபல திரைப்பட நடிகர் மோகன் சர்மா. இவர் தயாரிப்பாளரும் கூட. பன்முனத் திறமை வாய்ந்த இவருக்கு சென்னை போயஸ்கார்டனில் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது . இந்த வீட்டை விற்க  தனியார் நிறுவனத்தில் விளம்பரம் செய்திருந்தார். சேகரன், அவரது மகன் கிருஷ்ணகுமார்  என 2 இடைத்தரகர்கள் மூலம் மருத்துவர் ராஜா ரமணன் என்பவருக்கு கடந்த ஆண்டு வீட்டை விற்பனை செய்தார்.

 

மோகன் சர்மா

இந்நிலையில், வீட்டை விற்பனை செய்த நாள் முதல்,  இடைத்தரகர்கள் இருவரும் அத்துமீறி நுழைந்து வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இது குறித்து நடிகர்  மோகன் சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனால் மோகன் சர்மாவுக்கும், இடைத்தரகர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 26ம் தேதி மாலை 7 மணிக்கு   மோகன் சர்மா காரில் சென்ற போது அவர் மீது இடைத்தரகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.    

 

மோகன் சர்மா

அவர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  , தன்னை  4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அவரே நேரில் வந்து புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!