கன்னத்தில் அறைந்த ஆசிரியர்.. மாணவர் கவலைக்கிடம்!! கதறித்துடிக்கும் பெற்றோர்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் ரேவா மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது தனியார் பள்ளி. இங்கு இசை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரிஷப் பாண்டே. ரிஷப்பிடம் அனுஜ் சுக்லா என்ற 13 வயது மாணவர் இசை பயின்று வந்தார். ஆத்திரத்தில் ஒருநாள் அனுஜை ஆசிரியர் ரிஷப் பாண்டே அறைந்துள்ளார். இதனால் அனுஜ் கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அனுஜ் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வீக்கம் குறையவே இல்லை. மேலும் பெரிதாகவே அனுஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது ஆசிரியர் தாக்கிய இடத்தில், அனுஜ் சுக்லாவிற்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து அனுஜின் உறவினர்கள் ” ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த அனுஜ், ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆனால் குணமாகவே இல்லை கடந்த 4 நாட்களாக நாக்பூரில் உள்ள நியோரன் மருத்துமனையில் வென்டிலேட்டரில் ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ரேவா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் " செப்டம்பர் 11ல் அனுஜ் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், மாணவனை தாக்கிய ஆசிரியர் கையில் ருத்ராட்சம் அணிந்திருந்தார். இதனால் மாணவனை அறையும் போது ருத்திராட்சமும் கன்னத்தில் பதிந்து அவருக்கு கடுமையான முறையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். இசை ஆசிரியரால் தாக்கப்பட்ட சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!