நெகிழ்ச்சி... இஸ்லாமிய கைவினைஞர்கள் அயோத்தி ராமருக்கு தந்த அன்பளிப்பு!​​​​​​​

 
அயோத்தி

அயோத்தி மாநகரில் நாளை மறுநாள் குடமுழுக்கு விழ காண தயாராகி வரும் ராமர் கோயிலுக்கு, இஸ்லாமிய கைவிளைஞர்கள், 21.5 அடி நீளத்தில், உலகின் நீளமான புல்லாங்குழலை உருவாக்கி, அன்பளிப்பாக அளித்திருக்கின்றனர். நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வைக் கொண்டாட தயாராகி வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமருக்கு உலகம் முழுவதும் இருந்தும் மக்கள் அன்பளிப்புகளை அனுப்பி வருகின்றனர். 



அயோத்தி ராமர் கோயிலுக்கான பிரம்மாண்டமான பூட்டு, நீ...ளமான வாசனை ஊதுபத்தி, மெகா சைஸ் லட்டு, திருப்பதி திருமலையிலிருந்து லட்சக்கணக்கில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுக்கள் என அன்பின் நெகிழ்ச்சியிலும், பிரம்மாண்டத்திலும் அன்பளிப்புகள் அயோத்தி மாநகரில் குவிந்து வருகின்றன. அவற்றின் இந்துக்கள் நெகிழ்ச்சியடையும் விதமாக உலகின் மிக நீளமானது என அதன் தயாரிப்பாளர்களால் வர்ணிக்கப்படும் புல்லாங்குழல் ஒன்றும் சேர்ந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க இஸ்லாமிய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டிருப்பது சுவாரஸ்யம். 


அயோத்தி ராமரின் அவதார தலமாக அடையாளம் காணப்பட்ட இடத்தில், பல நூற்றாண்டுகளாக வரலாற்று சின்னமான பாபர் மசூதி காட்சியளித்தது. இதனிடையே பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், இருவேறு சமூக மக்களுக்கு இடையே இணக்கத்தை குலைக்கவும் காரணமானது. அதன் பின்னரான நீதிமன்ற வழக்கில் சுமூகம் காணப்பட்டதில், மசூதிக்கான மாற்று இடத்தை அரசே வழங்கியது.
தற்போது அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு காணவிருப்பதில், அவர் அனைவருக்குமானவர் என்பதை சமய வேறுபாடின்றி பல்வேறு மதத்து தலைவர்களும் போற்றி வருகின்றனர் .

அயோத்தி

இந்த வகையில் மெகா அன்பளிப்பு ஒன்று இஸ்லாமிய கைவினைஞர்களில் தரப்பிலிருந்து அயோத்தி ராமருக்கு சேர்ந்துள்ளது.21.5 அடி நீளத்திலான புல்லாங்குழலை கைவினை கலைஞர்களான ஹினா பர்வீன், ஷம்ஷாத் அஹ்மத், அர்மான் நபி ஆகியோர், தங்களது 10 நாள் உழைப்பில் உருவாக்கி உள்ளனர். வெறுமனே காட்சி அலங்காரத்துக்கு மட்டுமன்றி அதனை வாசிக்கவும் செய்யலாம். இந்த வகையில் செயல்படுத்தக்கூடிய உலகின் நீளமான புல்லாங்குழல் என இதனை வர்ணிக்கிறார்கள். இந்த புல்லாங்குழல், அயோத்தி ராமர் கோயில் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web