முஸ்லிம் திருமண பதிவுச் சட்டம் ரத்து; அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!

 
முஸ்லிம் திருமணம் நிக்காஹ்

அசாம் மாநிலத்தில் முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக அம்மாநில அமைச்சர் ஜெயந்தா மல்லபரூஹ் தெரிவித்துள்ளார். விரைவில் பொது சிவில் சட்டம் அசாம் மாநிலத்தில் அமலுக்கு வரும் என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் திருமணம்

"முஸ்லிம் திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவுச்சட்டம், 1935 ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்து பதிவுகள், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும்” என்று அசாம் மாநில அமைச்சர் ஜெயந்தா மல்லபரூஹ் கூறினார்.

மாநிலத்தில் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த 94 பதிவர்களுக்கும் சிறப்பு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். முஸ்லிம் திருமணம், விவாகரத்து பதிவு சட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண்கள், 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் குழந்தை திருமணத்துக்கு அனுமதித்து வந்தது. பழைய சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் குழந்தை திருமணங்கள் இனி தவிர்க்கப்படும்” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!