புனேயில் சனிவார் வாடாவில் முஸ்லிம் பெண்கள் தொழுகை... கோமியத்தால் சுத்தம் செய்த பாஜக எம்.பி.,!
மராட்டியத்தின் அடையாளமான புனேயின் சனிவார் வாடா கோட்டையில் முஸ்லிம் பெண்கள் தொழுகை செய்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி, வியாதான அரசியல் விமர்சனங்களுக்கு காரணமானது. பாஜக எம்பி மேதா குல்கர்னி தலைமையிலான சில இந்து அமைப்புகள், தொழுகை நடந்த இடத்தை ‘கௌமுத்ரா’ மூலம் சுத்தம் செய்தனர். இதையடுத்து, இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) அதிகாரியின் புகாரின் அடிப்படையில், கோட்டையில் தொழுகை செய்த அடையாளம் தெரியாத பெண்கள் குழு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கோட்டையிலும் காவல்துறையினர் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
शनिवार वाड्यात नमाज पठण चालणार नाही, हिंदू समाज आता जागृत झाला आहे ! 🚩🚩
— Dr. Medha Kulkarni (@Medha_kulkarni) October 19, 2025
🚩चलो शनिवार वाडा! 🚩
रविवार, 19 ऑक्टोबर 2025
📍 शनिवार वाडा, कसबा पोलीस चौकीसमोर
🕓 सायंकाळी 4 वाजता
---
🔥 पुण्याचे वैभव – शनिवार वाडा
ऐतिहासिक वारसा स्थळ की गैर हिंदू प्रार्थना स्थळ?
सारसबाग येथे… pic.twitter.com/EObcXMZ6Rt
மேதா குல்கர்னி, சம்பவம் "துரதிர்ஷ்டவசமானது" என்றும், சனிவார் வாடா நமாஸ் செய்ய ஏற்ற இடம் அல்ல என்றும் தெரிவித்தார். அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். அதே நேரத்தில், மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே, சனிவார்வாடாவை இந்து சமுதாயத்திற்கு நெருக்கமான இடம் எனக் குறிப்பிடும் பேச்சுடன், தொழுகை நடத்த விரும்பினால் முஸ்லிம்கள் மசூதியில் சென்று செய்யுமாறு அறிவுரை வழங்கினார்.
Pune, Maharashtra: On Shaniwar Wada protest, BJP Rajya Sabha MP Medha Kulkarni says, "This ASI monument is a national monument. If such prayers are not allowed, then why were such prayers conducted here? A strict investigation should be carried out. Secondly, when we went there,… pic.twitter.com/MbvSVkNX9z
— IANS (@ians_india) October 21, 2025
இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். என்.சி.பி. செய்தித் தொடர்பாளர் ரூபாலி பாட்டீல் தோம்ப்ரே, புனேவில் இரு சமூகம் ஒற்றுமையாக வாழும் போது இந்த நிகழ்வு "இந்து vs முஸ்லிம்" பிரச்சனை எழுப்புகிறது என விமர்சித்தார். AIMIM செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான், பாஜக இந்நிலையில் மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவத்தை அழிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர், குற்றச்சாட்டு மற்றும் வெறுப்பை பரப்பும் செயல்கள் அரசியலமைப்பின் 25வது பிரிவின் மத சுதந்திர உரிமையை மீறுவதாகவும், மக்களுக்கு புரியச் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
