நெகிழ்ச்சி..... இஸ்லாமியர்கள் வீடு, வீடாக விநாயகர் சிலை பூஜை பொருட்கள் விநியோகம்!!

 
விநாயகர்

இன்று செப்டம்பர் 18ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை  முன்னிட்டு கிருஷ்ணகிரியில் , பூஜை பொருட்களுடன் கூடிய விநாயகர் சிலைகளை வீடு வீடாக சென்று இஸ்லாமியர்கள் வழங்கியுள்ளனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடையே மத மோதல்களை உருவாக்கி  அதன் மூலம் லாபம் அடைய முயற்சிப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது    

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு செய்யும் முறை!

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி, அவற்றுடன் பூஜைக்கு தேவையான பூமாலை, பழங்களை சேர்த்து வைத்து  இந்துக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட இந்த செயல் கிருஷ்ணகிரி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web