நெகிழ்ச்சி... ரூ1,00,000/- ரொக்கப்பணம், பட்டுச்சேலை, இனிப்புக்கள்... மாரியம்மன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை!

 
இஸ்லாம்

 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  பாகலூரில்  அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது.  பழமையான இந்த  கோவில் சமீபத்தில்  சுமார் ரூ7 கோடி  செலவில் புரணமைக்கும் பணிகள் நடைபெற்றன.   கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில்  கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

இஸ்லாம்
  இதற்காக  ஸ்ரீகோட்டை மாரியம்மனுக்கு கணபதி ஹோமம், கோபூஜை  உட்பட  பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இன்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தில்   பாகலூர் பகுதியில்  காலம் காலமாக வசித்து வரும்  இஸ்லாமிய அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து   தாய் வீட்டு சீதனமாக ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.  இந்த சீர்வரிசையில்  ஒரு லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உட்பட பல பொருட்கள் அடங்கியிருந்தன. இதனை  தாம்பூலத் தட்டில் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் அதனை கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

இஸ்லாம்
இதனைத் தொடர்ந்து  கோவிலில்  நடைபெற்ற  சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மதபேதமின்றி கலந்து கொண்டு அம்மனை  வழிபாடு செய்தனர்.  இஸ்லாமியர்கள் வழங்கிய சீர்வரிசை பொருட்கள் மூலம்  அம்மனுக்கு  பூஜைகள் செய்யப்பட்டன. இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.  பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல இந்தியாவில் வாழ்ந்து வரும்   அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என இரு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web