“என் அடுத்த படம் ஜனவரியில் அறிவிக்கப்படும்...” நடிகர் அஜித்குமார்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், திறமையான கார் பந்தய வீரராகவும் திகழும் அஜித்குமார், தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை ஜனவரி மாதத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அஜித் தற்போது தனது கார் பந்தய ஆர்வத்தில் முழு நேரம் செலவழித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் தொடங்கிய ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனியார் பந்தய அணியின் வாகனங்கள் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளன.

இந்நிலையில், தனது அடுத்த திரைப்படம் குறித்து பேசிய அஜித், “இன்னும் இரண்டு மாதங்களில் *ஏகே 64* படத்தின் பணிகளைத் தொடங்க உள்ளேன். வருகிற ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும். நான் சினிமாவிலும், கார் பந்தயத்திலும் ஒரே நேரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன்,” என தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். ‘ஏகே 64’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்பட ரசிகர்கள் மத்தியில் அஜித்-ஆதிக் கூட்டணிக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், ஜனவரி மாத அறிவிப்பை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
