விமான நிலையத்தில் பறந்த மர்ம பொருட்கள்... விமான சேவை கடும் பாதிப்பு!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 10.10 மணியளவில் 3 அடையாளம் தெரியாத பொருட்கள் வானில் பறந்து கொண்டிருந்தன. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வானில் பறக்கும் பொருட்கள் ஆளில்லா விமானங்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதியம் 12.45 மணி வரை அடையாளம் தெரியாத பொருட்கள் வானில் பறந்து கொண்டே இருந்தன. இதனால் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அனுமதியைத் தொடர்ந்து அங்கு விமானப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வானில் பறக்கும் மர்ம பொருட்கள் ஆளில்லா விமானங்களா? அல்லது வேறு ஏதாவது? விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவை ட்ரோன்கள் என்றால், அவற்றை இயக்கியது யார்? விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!