நான் சாகலை... அது விழிப்புணர்வுக்காக பரப்பிய வதந்தி... அதிர்ச்சி கொடுத்த பூணம் பாண்டே !

 
பூனம் பாண்டே

பிரபல நடிகையும், மாடல் அழகியுமான பூனம் பாண்டே  நேற்று முன்தினம் பிப்ரவரி 1 ம் தேதி  இரவு திடீரென காலமானதாக தகவல் பரவி, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. கர்ப்பப்பை புற்று நோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக  அவரது மேலாளர் நிகிதா சர்மா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.  ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து  பூனம் பாண்டேயின் குடும்பத்தினர் எந்த கருத்தும் இதுவரை  தெரிவிக்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது மொபைல் போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், பூனம் பாண்டே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உதவியாளரும் தனிப்பட்ட பாதுகாவலருமான அமின் கான் இது குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். 


அமின் கான் இது குறித்து  '' பூனம் பாண்டே  உயிரிழந்தார்  என்பதை  நம்பவே முடியவில்லை. அவரது சகோதரியிடம் தொடர்பு கொண்ட போது  இணைப்பு கிடைக்கவில்லை.  அவரது மேலாளர் நான் பூணம் பாண்டே இறப்பை  மீடியா மூலம் தான்  தெரிந்து கொண்டேன். ஜனவரி 31ம் தேதி கூட மும்பையில் உள்ள போனிக்ஸ் மாலில் போட்டோ ஷூட்டிற்கு அவருடன் நான் தான் சென்று இருந்தேன். அவர் ஆரோக்கியமாக மிகவும்  நன்றாக தான் இருந்தார். அவருக்கு எந்த வித உடல் கோளாறும் இருந்ததாக தெரியவில்லை. இதற்கு முன் அவர் என்னிடமும் தனக்கு உடல் நலக்கோளாறு இருப்பதாக எதுவும் சொல்லிக் கொள்ளவே இல்லை.   உண்மை நிலவரம் குறித்து   அவரது சகோதரியிடமிருந்து தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்'' என பதிவிட்டிருந்தார். பலரும் நடிகை பூனம் பாண்டே மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த நிலையில், தான் உயிரோடு இருப்பதாக நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார். கர்ப்ப பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் இவ்வாறு செய்தியைப் பரப்பியதாக கூறும் பூனம் பாண்டேவை, விழிப்புணர்வு செய்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கு? இப்படியெல்லாமா பண்ணுவாங்க? என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web