இன்று நாக சைதன்யா , சோபிதா நிச்சயதார்த்தம்?
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா. இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தனர். இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் பறவைகளான நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இடையே திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இன்று ஆகஸ்ட் 8ம் தேதி இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா ரூத் பிரபுவை விவாகரத்து செய்த நாக சைதன்யா, சோபிதாவுடன் அவரது உறவு குறித்து தொடர்ந்து ஊகங்கள் எழுந்து வருகின்றன. அவர்கள் இருவரும் தங்கள் உறவை பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை எனினும் இருவரும் ஒன்றாக இருந்ததை ஊடகங்கள் பகிரங்கப்படுத்தின. ஜூன் மாதம் ஒருவரும் ஐரோப்பாவில் ஒன்றாக இருந்த படங்கள் வெளியாகின. இது குறித்த புகைப்படங்களில் நாகாவும் சோபிதாவும் ஒயின் சுவைத்ததை காட்டியது. 2021 ல் சமந்தாவிடமிருந்து நாகா பிரிந்ததும் வதந்திகள் உலா வரத்தொடங்கின. நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா திருமணத்தைப் பற்றிய குறிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தப் படங்கள் நாளை வெள்ளிக்கிழமை வெளியாகலாம் என்கின்றன நண்பர்கள் வட்டாரங்கள்.

சோபிதா சமீபத்திய நேர்காணலில் “நான் எப்போதும் காதலில் இருக்கிறேன். காதல் ஒரு வரையறுக்கும் எரிபொருள். இது ஒரு தேவை மற்றும் ஆடம்பரமான ஒரே விஷயம். ” எனக் கூறியுள்ளார். வதந்திகள் உண்மையாக இருந்தால், நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா விரைவில் திரைத்துறையில் அதிகம் பேசப்படும் ஜோடிகளில் ஒன்றாக வலம் வருவர் என்பதில் ஐயமில்லை.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
