தனுசின் அடுத்த படத்தில் நாகார்ஜுனா!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 
தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள  படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிறகு தனுஷ் தனது 50வது  படத்தை தானே இயக்கி நடிக்கிறார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகப் போகும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்படப் பலர் நடிக்கின்றனர்.  இந்தப் படத்துக்காக சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தனுஷ்


தனது 51வது படத்தில், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவுடன் நடிகர் தனுஷ் கைகோர்க்க உள்ளார். இந்த படத்திற்கு தனுஷ் 51   என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து டோலிவுட் கிங் நாகார்ஜூனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 37 ஆண்டுகளாக வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் 'கிங்' நர்கார்ஜுனா  ஆகஸ்ட் 29ம் தேதி நேற்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடினார்.  

தனுஷ்

அப்போது தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ்   நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, D-51 படத்தில் நாகார்ஜுனா, தனுஷுடன் இணைந்து நடிக்கும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். இதையடுத்து முதல் முறையாக ஒன்றிணையும் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காம்போவுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  படத்தின் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது.  இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web