ஒரே நாளில் 210 நக்ஸல்கள் சரண்... முதல்வர் பெருமிதம்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 210 நக்ஸல்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தனர். இதில் பெண்களும் அடங்கியுள்ளனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் சத்தீஸ்கரில் சரணடைந்த நக்ஸல்களின் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது. நக்ஸல்கள் ஏகே-47, இன்சாஸ் உள்ளிட்ட 153 ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.

நாட்டில் இருந்து நக்ஸல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நக்ஸல்கள் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் பாதுகாப்புப் படைகளின் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்திருந்தார். இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சரணடையும் நக்ஸல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சரணடைந்தவர்களை வரவேற்ற சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், “தவறாக வழிநடத்தப்பட்ட 210 சகோதர, சகோதரிகள் ஆயுதங்களை கைவிட்டு மகாத்மா காந்தியின் அஹிம்சை பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். மறுவாழ்வு கொள்கையின் கீழ் அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை வழங்கப்படும். இது பாதுகாப்புப் படைகள், காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கூட்டு முயற்சிக்கான பலனாகும். இது பஸ்தார் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலேயே ஒரு சிறப்பான நாள்” என்று
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
தெரிவித்துள்ளார்.
