இந்திய அணி ஜெர்ஸியில் பெயர் மாற்றம்!!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனையடுத்து இந்தியா இனிபாரத் என அழைக்கப்படும் என பாஜக அறிவித்து வருகிறது. இது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வைரலாகி வருகின்றன. ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது.
I have always believed a name should be one which instills pride in us.
— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
We are Bhartiyas ,India is a name given by the British & it has been long overdue to get our original name ‘Bharat’ back officially. I urge the @BCCI @JayShah to ensure that this World Cup our players have… https://t.co/R4Tbi9AQgA
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் வலைதளத்தில் “ ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது” என பதிவிட்டுள்ளார். இந்த உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும். என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னுதாரணமாக சில நாடுகள் பெயர்களை மாற்றியதை சுட்டிக்காட்டியுள்ளார். 1996ல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி ஹாலந்து என்ற பெயரில் விளையாட வந்தது. பின் 2003ல் திரும்ப அவர்களுடன் விளையாடும் போது நெதர்லாந்து என்று மாற்றியது. பர்மா ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை 'மியான்மர் ' என மாற்றிவிட்டது என விளக்கமும் அளித்துள்ளார். இத்தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!