”வந்தாரை வாழ வைக்கும் சென்னை” க்கு 384வது பிறந்தநாள்!!

 
நம்ம சென்னை

ஆகஸ்ட் 22ம் தேதி  செவ்வாய்க்கிழமை இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.  1996ல் திமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் கருணாநிதி மெட்ராசை சென்னை என அறிவித்தார். அது முதல் ஆகஸ்ட் மாதத்தில் சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. சென்னை   இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1639ல் இதே நாளில்   பிரிட்டிஷ் நிர்வாகியான பிரான்சிஸ் டே, தனது மேலதிகாரியான ஆண்ட்ரூ கோகனுடன் சேர்ந்து, விஜயநகரப் பேரரசுடன் இன்றைய சென்னையை  கையகப்படுத்தினார். அந்த ஒப்பந்தம் முதலே  சென்னப்பட்டணம்  மெட்ராஸாக மாறியது,

நம்ம சென்னை

இன்று தமிந்நாட்டின் தலைநகர் சென்னையாக உருவெடுத்துள்ளது.  டச்சுக்காரர்கள் மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்தனர். அவர்களுக்கு போட்டியாக  பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் வர்த்தக மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக வாங்கிய நிலம் சென்னை பட்டணம் என  கையெழுத்தானது.  384 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டணமாக இருந்து தற்போது நாட்டின் மெட்ரோ நகரங்களில் ஒன்றாக மாறி உருமாறியுள்ளது. தொடக்கத்தில்  சென்னை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்தன. சிறுசிறு   கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டு நகரமாகி தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.   கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, சுற்றுலா, வாகனத் தொழில்கள், திரைப்படங்கள் என பல துறைகளில்  தமிழகத்தில் சென்னையே முதலிடத்தில் இருந்து வருகிறது.  சென்னை உயர்நீதிமன்றம், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம்  ராயபுரம் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி மருத்துவமனை, விக்டோரியா மஹால், ரிப்பன் மாளிகை, ராஜாஜி அரங்கம்  இந்தியாவின் மிக நீளமான  மெரினா கடற்கரை, டைடல் ஐடி பார்க்,  கோயம்பேடு பேருந்து நிலையம், பிரபலமான வழிபாட்டு தலங்கள், கன்னிமாரா நூலகம், கலங்கரை விளக்கம் என சென்னையின் தனிப்பெருமைகள் ஏராளம்.  

நம்ம சென்னை

இதனைக்   கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.   2004ல் வெறும் 5 நிகழ்வுகளுடன் தொடங்கிய இந்த கொண்டாட்டம் 2007 இல் 60 நிகழ்வுகளுக்கு மேல் படிப்படியாக வளர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும், மெட்ராஸ் வாரம் மற்றும் மெட்ராஸ் மாதம் கொண்டாடப்பட வேண்டும் என்று மக்கள் கோருவதால், ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.  சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் 384வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதல்வர்  ஸ்டாலின் பங்கேற்றார். இதில் இடம்பெற்றுள்ள  சென்னை பள்ளி மாணவர்களின் "அக்கம் பக்கம்" புகைப்படக் கண்காட்சி,  "தி இந்து" குழுமத்தின் சார்பில் ஆவணப் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web