‘நம்ம ஊரு பள்ளி’ திட்ட நிதி ரூ.1,000 கோடியைத் தொட்டது’ - மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்!

 
ஸ்டாலின் பள்ளி மாணவர் மாணவி அரசு

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டம் ரூ.1,000 கோடி நன்கொடையைத் தொட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்து, பங்களித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

2022 டிசம்பர் 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம், பொதுமக்கள் மற்றும் சிறு, குறு, பெரிய நிறுவனங்களின் பங்களிப்புகள் மூலம் தமிழக அரசுப் பள்ளிகளை நவீனமயப்படுத்தும் முயற்சியாகும்

டிபிஐ பள்ளி கல்வித்துறை

இது வரை இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான நிதி திரட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில், “ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டும் ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன், இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் மிகுந்த கவனம் செலுத்தும் அரசு இதுவே.

அரசின் முயற்சிகளுக்கு துணையாக 5 லட்சம் ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி நான் தொடங்கிய இந்த முன்னெடுப்பில், தற்போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் கிடைத்துள்ளன. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பல முன்னேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர் அரசு பள்ளி வகுப்பறை மாணவர்கள்

மேலும், “நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவிய 885 நிறுவனங்களுக்கும் 1,500 நன்கொடையாளர்களுக்கும் நன்றிகள். வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த அன்பில் மகேஷ் மற்றும் அறக்கட்டளைத் தலைவர் வேணு சீனிவாசனுக்கும் பாராட்டுகள்” என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?