அசத்தல்... பூமியைப் போல் நீர் மூலக்கூறு உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு..!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, உயிர்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. TOI-715 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்டது. இந்த கிரகம் அதன் தாய் நட்சத்திரத்தை ஒரே சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.
Discovery alert! 🚨 Meet a ‘super-Earth!’
— NASA 360 (@NASA360) February 2, 2024
At about one and a half times as wide as Earth, TOI-715 b orbits its star within the “conservative” habitable zone — the distance that could give the planet the right temperature for surface liquid water to form: https://t.co/TNXIJMBVU2 pic.twitter.com/wSAhY7kNFx
இந்த கிரகம் தனது சுற்றுப்பாதையை 19 நாட்களில் நிறைவு செய்கிறது. இந்த கிரகத்தில் ஒரு வருடம் 19 நாட்கள் மட்டுமே. நாசாவின் கூற்றுப்படி, அதன் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. திரவ நீர் இருப்பது உயிரினங்களுக்கு உகந்தது.நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சூப்பர்-எர்த்' ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது, மேலும் பூமியின் அளவிலான மற்றொரு கிரகம் இருக்கலாம். நாசாவின் கூற்றுப்படி, இது வானியல் தரநிலைகளின்படி பூமிக்கு மிக அருகில் உள்ளது.
"நீர் மேற்பரப்பில் இருப்பதற்கு, தொடர்புடைய பல வளிமண்டல காரணிகள் இருப்பது போல் தெரிகிறது. இதுவரை எடுக்கப்பட்ட தோராயமான அளவீடுகளின் அடிப்படையில் இந்த சிறிய கிரகம் பூமியை விட சற்று பெரியதாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. இந்த கிரகம் சுற்றி வரும் சிவப்பு நட்சத்திரம் சூரியனை விட சிறியது மற்றும் குளிர்ச்சியானது.
இந்த கிரகங்கள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை விட மிக நெருக்கமான சுற்றுப்பாதையில் உள்ளன. ஆனால் அவை சுற்றிவரும் நட்சத்திரம் சிறியதாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதால் கிரகங்கள் நெருக்கமாக உள்ளன. இவை அருகில் இருந்தாலும், உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க