வீடியோ.... பிரிக்ஸ் மாநாட்டு மேடையில் கீழே கிடந்த தேசியக் கொடி!! மோடியின் நெகிழ்ச்சி செயல்!!

 
பிரிக்ஸ் மாநாடு

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் அமைப்பின் 15வது உச்சி மாநாடு  தொடங்கியுள்ளயது. இந்த மாநாட்டில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா  நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், 5 நாட்டு தலைவர்களும் சேர்ந்து இன்று பிரிக்ஸ் குரூப் போட்டோ  எடுத்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.   அவர்கள் அனைவரும் பிரிக்ஸ் குரூப்   புகைப்படம் எடுக்க தயாராகிக் கொண்டிருந்தனர்.


 

இதற்காக தலைவர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வருகை தந்தனர்.தென்ஆப்பிரிக்க அதிபர் ரமாபோசா முன்னே செல்ல, அவரை பின்தொடர்ந்து பிரதமர் மோடி மேடைக்கு சென்றார். இதில், இந்தியாவின் மூவர்ண கொடி ஒன்று மேடையின் தரை பகுதியில் கீழே விழுந்து கிடந்தது. பிரதமர் மோடி பேச்சு அதன் மீது மிதித்து விடாமல் இருப்பதற்காக கீழே குனிந்து, அதனை கையில் எடுத்தார். அத்துடன்  தனது மேல் கோட்டின் பையில் வைத்து கொண்டார்.

பிரிக்ஸ் மாநாடு

பெண் அதிகாரி ஒருவர்  கொடியை எடுக்க ஓடி வந்தார். ஆனால் அதற்கு முன்பே மோடி அதை எடுத்து பாதுகாப்பாக பையில் வைத்து விட்டார்.   இதன் பின்னர் பிரிக்ஸ் குரூப்  போட்டோ  எடுக்கப்பட்டது. அதில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனேசியோ லுலா டா சில்வா, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் ரமாபோசா, பிரதமர் மோடி மற்றும் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web