அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

 
அந்தமான்

அந்தமான் தீவின் கடல் படுகையில் முதன் முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய அரசு நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் தெரிவித்துள்ளது. 

அந்தமான் கடற்கரை தொகுதியான AN-OSHP-2018/1-ல் ஆய்வு கிணறு தோண்டப்பட்டபோது இந்நிகழ்வு பதிவாகியுள்ளது. முதற்கட்ட மதிப்பீடுகளின் படி, சம்பந்தப்பட்ட இடத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் எனவும்  இந்த கண்டுபிடிப்பு எதிர்கால ஆய்வுகளுக்கு உதவக்கூடும் எனவும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து  அந்நிறுவனம் கூடுதல் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனக் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளதாக  நீண்ட நாள் நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?