நாளை நவராத்திரி கலசம், கொலு வைக்க உகந்த நேரம், வழிபடும் முறை!

 
நவராத்திரி

நவராத்திரி கொலு வைக்கப் போறீங்களா?. இந்த விஷயங்களை எல்லாம் மறக்காதீங்க. சரியான முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு உங்களுடைய வழிபாட்டை துவங்குங்க. பொதுவாக வருஷத்துக்கு 4 முறை நவராத்திரி கொண்டாடப்பட்டாலும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி தான் மிகவும் விசேஷமானது. அம்பிகையை 9 நாட்களும் துர்க்கையாக, லட்சுமியாக, சரஸ்வதியாக கொண்டாடுவர்.  ஆடி மாதம் எப்படி அம்பிகைக்கு உகந்ததோ அதே போல் அம்பிகையின் அருளை பெறுவதற்கு மிகவும் ஏற்ற காலம் ,நவராத்திரி காலமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் குங்கும அர்ச்சனை, விளக்கு பூஜை, மாவிளக்கு வழிபாடு, வரலட்சுமி விரதம் இவைகளை செய்ய இயலாதவர்கள் நவராத்திரியில் அதனை செய்து அதற்கான முழு பலன்களையும் பெற முடியும் .  

அன்னை பராசக்தி, அசுரர்களை வதம் செய்து வெற்றி கொண்டதை கொண்டாடும் விழாவாக நவராத்திரி விழா புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. புரட்டாசி மாத நவராத்திரி  மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, அஷ்டமி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. 10 வது நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.  

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு

அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி திங்கட்கிழமை நவராத்திரி தொடங்குகிறது. முதல் நாளில் கலசம் அமைத்து, கொலு படிகள் அடுக்கி வழிபாட்டை துவங்க வேண்டும். செப்டம்பர் 28ம் தேதி தொடங்கி, கடைசி ஐந்து நாட்கள் மகா சஷ்டி, மகா சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி மற்றும் அதைத் தொடர்ந்து விஜயதசமியும் விமரிசையாக கொண்டாடப்படும்.  செப்டம்பர் 22ம் தேதி நவராத்திரி வழிபாடுகள் துவங்கி, அக்டோபர் 01ம் தேதி சரஸ்வதி பூஜை எனப்படும் மகா நவமியும், அக்டோபர் 2ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது.

கொலு

கொலுப்படி, கலசம் வைக்க உகந்த நேரம்: 

செப்டம்பர் 22ம் தேதி காலை 06.09 முதல் 08.06 மணி வரையிலான நேரம் கலசம் அமைப்பதற்கான முகூர்த்த நேரமாக கருதப்படுகிறது.  அன்றைய நாளில் அபிஜித் முகூர்த்தம் காலை 11.49 முதல் பகல் 12.38 வரையிலான நேரம் அமைந்துள்ளது. இந்த நேரங்களில் கலசம் அமைத்து, நவராத்திரி வழிபாட்டிற்காக அம்பிகையை கலசத்தில் ஆவாஹனம் செய்யலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?