நவி மும்பையில் 1,160 ஹெக்டேரில் சர்வதேச விமான நிலையம்... பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் - முக்கிய அம்சங்கள்!
நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து திறந்தார்.
இந்த விமான நிலையம் அதானி குழுமத்தின் பொது தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின்கீழ் கட்டப்பட்டு உள்ளது. டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கு சேவை வழங்கும் திட்டத்தில் உள்ளது.
பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்த போது பேசியதில், நவி மும்பை சர்வதேச விமான நிலையம் மும்பையில் பயண இணைப்புகளை மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கை வகிக்குமென கூறினார். மேலும், மகாராஷ்டிரா விவசாயிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் இணைத்தல் மூலம் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இது செயல்படும் என்றும் தெரிவித்தார். இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய விமான இணைப்பு மையமாக நவிமும்பை விமான நிலையம் மாறும்.

மும்பையில் பயணிகளை எளிதாக நகர்த்தும் வகையில், நகரின் நிலத்தடி மெட்ரோ கட்டமைப்பு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. நெரிசலான மும்பை நகரத்தில் நிலத்தடி மெட்ரோ அமைத்தல் ஒரு பெரிய சாதனை என விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIA) திடீர் வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு கட்டிடம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தது, தற்போது 160க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
முக்கிய அம்சங்கள்:
விமான நிலையத்தின் முதல் கட்ட பணிகள் ரூ.19,650 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையமாகும்.

சரத்பதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து செயல்படும்.
முழுமையாக செயல்படும் போது வருடத்திற்கு 90 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் மற்றும் 3.25 மில்லியன் மட்ரிக் டன் சரக்கு கையாளும் திறன் இருக்கும்.
தற்போதைய கட்டமைப்பு ஒரு முனைய அமைப்புடன் ஒற்றை ஓடுபாதை கொண்டது, ஆண்டுக்கு 20 மில்லியன் பயணிகளை சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய உள்கட்டமைப்பு தற்போதைய நிலையில் மணிக்கு 20-22 விமானங்களை நிர்வகிக்க முடியும். அடுத்த ஆண்டு திறனை விரிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளன.
முதல் முனையம் திறக்கப்பட்ட 12-15 மாதங்களில் அதிகபட்ச செயல்திறனை எட்டும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
