நவராத்திரி விழா... சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு!

 
நவராத்திரி விழா... சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் புறப்பாடு நடைபெற்றது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியது! பக்தர்கள் உற்சாகம்!

திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்த நவராத்திரி விழா, 1840ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் வகையில், கம்பா் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும்.

அதன்படி, சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் புறப்பாடு இன்று காலை 7.15 தொடங்கியது. குமாரகோவில் வேளிமலை முருகன் விக்கிரக ஊா்வலம் புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது. அங்கு பாரம்பரியமான திருவிதாங்கூா் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web