நயன் தாரா 22 ஆண்டு கால திரைப்பயணம் ... "திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என அறியவில்லை” ... நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, திரையுலகில் தனது 22 ஆண்டு பயணத்தை நினைவுகூரும் வகையில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார்.
டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயர் கொண்ட நயன்தாரா, 2003ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மனசினக்கரே’ படத்தின் மூலம் silver screen-ல் முதற் keerthi பாய்ந்தார். பின்னர் 2005-ல், சரத்குமாருடன் 'ஐயா' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
— Nayanthara✨ (@NayantharaU) October 8, 2025
தொடந்து, ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம், தென்னிந்திய திரையுலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தார். இன்று அவர் தமிழுடன், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.இந்த நிலையில், திரையுலகில் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூரும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்ட உருக்கமான பதிவு ஒன்று ரசிகர்களை நெகிழச்செய்துள்ளது:
"நான் முதன்முதலில் கேமரா முன் நின்று 22 வருடங்கள் ஆகின்றன. ஆனால் திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல் இருந்தேன். ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு மௌனமும்... என்னை வடிவமைத்தன, என்னை குணப்படுத்தின, என்னை நானாக மாற்றியது. என்றென்றும் நன்றியுடன்."
இப்பதிவு ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. திரையுலகத்தில் அவரது நிலைத்திருக்கும் பயணத்தையும், ஒவ்வொரு படத்திலும் காட்டிய உழைப்பையும் எண்ணி, பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
