”9 ஸ்கின்” ஸ்கின் புராடக்ட்டில் களமிறங்கும் நயன்தாரா!!

 
நயன் தாரா

தமிழ் திரையுலக நடிகர், நடிகைகள் பலரும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு பிசினஸ் ஆரம்பித்து அதில் முதலீடு செய்வது வாடிக்கையான ஒன்று தான் . அந்த வகையில்   நடிகை சமந்தா ‘சகி’ என்ற ஆடை பிசினஸ், நடிகை காஜல் நகை தொழிலில் முதலீடு  என அந்த துறையிலும் பிசியாக வலம் வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது   நடிகை நயன்தாரா தனது கணவருடன் இணைந்து அழகு சாதன பொருள் விற்பனை தொழிலை தொடங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  


நயன் தாரா முதலில் தனது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து, சாய் வாலே என்ற டீ நிறுவனத்தில் முதலீடு செய்தார். அடுத்ததாக, கெமிக்கல் ப்ரீ லிப் பாமை தயாரித்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் துறைக்குள் நுழைந்தார்.  இந்நிலையில், ’9ஸ்கின்’ என்ற பெயரில் ஸ்கின் கேர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார்.  

நயன் தாரா

இதற்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுளது. அடுத்தடுத்து   வரிசையாக பிசினஸ் தொடங்கி வந்தால் அப்போ சினிமா அவ்வளவுதான என சில ரசிகர்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.   சினிமாவை போல மற்ற துறைகளிலும் நயன் தாரா   கலக்குவார் என்கின்றனர்.   நயன்தாராவின் இந்த புது பிசினசுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அவரது நண்பர்கள் பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web