அசத்தல்... ஈட்டி எரிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்!!

 
நீரஜ் சோப்ரா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தில் இருந்து வருகிறது.  இதுவரை இந்திய அணி 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 81 பதக்கங்களுடன் பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.  8ம் தேதி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால், மேலும் சில பதக்கங்களை இந்தியா பெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

நீரஜ் சோப்ரா

இந்நிலையில், ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தல் சாதனை படைத்துள்ளார்.   அதிகபட்சமாக 88.88 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா 87.54 மீட்டர் தூரம் எறிந்து 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.   ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் இருவரும்  தங்கம், வெள்ளி வென்று அசத்தி உள்ளனர்.

2021-ம் ஆண்டுக்குரிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2023-க்கு ஒத்திவைப்பு – ஆசிய கிரிக்கெட் கவுன்சில்


அதே போல் ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணி 3:01.58 நிமிடங்களில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளார்.  மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா மிஸ்ரா, பிராச்சி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web