வெளிநாடுகளில் 14 நீட் தேர்வு மையங்கள்... தேசிய தேர்வு முகமை அதிரடி!

 
நீட் நுழைவுத்  தேர்வு

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட்  நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 554 மையங்களில் மே 5ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக 14 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.   

நீட்

அந்த வகையில் இந்தியாவிற்கு வெளியே தேர்வு எழுதும் வகையில் மாணவர்களுக்கு எந்தெந்த மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது  குறித்த  தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இது குறித்து தேசிய  தேர்வு முகமையின் இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “ உலகம் முழுவதும் 12 வெளிநாடுகளில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் ”என  தெரிவித்துள்ளார்.
  மேலும்  ”நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் இந்தியாவில் உள்ள தேர்வு மையங்களைத் தேர்வு செய்த  மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாற்றவும்  வாய்ப்புகள் அளிக்கப்படும்.   விண்ணப்பம் பதிவில்  திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்படும். அப்போது  இந்த பட்டியலின் அடிப்படையில் தேர்வு மையங்களை மாற்றி குறிப்பிட்ட  நாடுகளில் செயல்பட உள்ள  தேர்வு மையங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

முதுகலை நீட் தேர்வு


அதன்படி  ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத்,  தாய்லாந்தின் பாங்காக், இலங்கையின் கொழும்பு, கத்தாரின் தோஹா, நேபாளத்தில் காட்மண்டு ,   மலேசியாவின் கோலாலம்பூர், பஹ்ரைனின் மனாமா, ஓமனின் மஸ்கட், சவுதி அரேபியாவின் ரியாத், சிங்கப்பூர்  என  14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.  நீட் தேர்வுக்கு   விண்ணப்பிக்க  மார்ச் 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web