நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே5ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் JEE தேர்வின் முதல் பகுதி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரை நடக்கிறது. இதன் 2 வது பகுதி தேர்வு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை நடக்கிறது.
மேலும் பொது பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பு சேர்க்கைக்கான ‘க்யூட்’ நுழைவு தேர்வு 2024 மே 15 முதல் மே 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியகுழு கல்லூரி சேர்க்கைக்கான தேசிய நுழைவு தேர்வு 2024 ஜூன் 10 தொடங்கி 21 வரை நடத்தப்பட உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...