நீட் தேர்வு பயிற்சி மாணவி டெங்குவால் பலி!! தொடரும் சோகம்!!

 
சினேகா

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வுகள் அவசியமாகின்றன. இதனால் நாடு முழுவதும் பல்வேறுபகுதிகளில் நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில்   ராஜஸ்தான் மாநிலத்தில் மகோட்டாவில் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் அதிகம்.  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும்  அதிகமான மாணவர்கள் கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் நீட், ஐஐடி ஜெஇஇ  போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.இங்கு பயிற்சி பெற வரும் மாணவர்கள், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும் வழக்கமான ஒன்றாகி வருகிறது.

சினேகா

 2023ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை  24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்த தீவிர விசாரணை மற்றும் ஆய்வின் அடிப்படையில்   கோட்டா நகரில் உள்ள அனைத்து பயிற்சி மையங்களும் அடுத்த  2  மாதங்களுக்கு எவ்வித தேர்வும் நடத்தக் கூடாது என  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.  இந்த நிலையில், கோட்டாவில் தங்கி நீட் தேர்விற்குப் படிக்க வந்த மாணவி, டெங்குவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட  பிஎஸ்என்எல் அதிகாரியின் மகளான சினேகா, கோட்டாவில் உள்ள தல்வாண்டி பகுதியில் தங்கி நீட் தேர்விற்கு தயாராகி வந்தார்.  

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இவர் கடந்த 5 நாட்களாக டெங்குவால்  உடல் நலம் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்திரா விகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினேகா அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்   அடுத்தடுத்து சினேகாவின் பல உறுப்புகள் செயலிழக்க தொடங்கின. வெண்டிலேட்டர் வழியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று மாலை  சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இருந்து இதுவரை அறிக்கை வரவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  டெங்குவால் நீட் மாணவி பலியான சம்பவம் கோட்டாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web