பிரபல நடிகையின் ஆபாச படம்.. மார்பிங் செய்து வெளியிட்ட நபர் மீண்டும் கைது..!!

 
நடிகை பிரவீனா

பிரபல நடிகை பிரவீனா மற்றும் அவரது மகளின் புகைப்படங்களை ஆபாசமாக உருவி சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக நெல்லை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரவீணா. ஹஸ்பண்ட்ஸ் இன் கோவா, உஸ்தாத் ஹோட்டல், ஹனி பீ மெமரீஸ் உள்ளிட்ட பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். டப்பிங் கலைஞரான இவர் தமிழில் வெற்றிவேல்,  தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2, கோமாளி, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம்.

Praveena Morphed Photos With Daughter LEAKED | இணையத்தில் வெளியான மகளின்  ஆபாச புகைப்படங்கள், கொந்தளித்த சீரியல் நடிகை | Movies News in Tamil

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனாவின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதுபற்றி அறிந்த நடிகை பிரவீனா திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆபாச புகைப்படங்களை ஷேர் செய்தது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாக்யராஜ் (26) என்பது தெரியவந்தது.

இவர் டெல்லியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் போலீசார் உடனடியாக டெல்லி விரைந்து வந்து பாக்யராஜை கைது செய்தனர். விசாரணையில் அவர் நடிகை பிரவீனாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆபாச படங்களை உருவாக்கியது தெரியவந்தது.

அவரை போலீசார் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு மாதம் கழித்து பாக்யராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு மீண்டும் டெல்லி சென்ற பாக்யராஜ், அங்கு இருந்தபோது நடிகை பிரவீனா மற்றும் அவரது மகளின் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நடிகை பிரவீணா மீண்டும் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து டெல்லி சென்று பாக்கியராஜை கைது செய்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க