இஸ்ரேல் தாக்குதலில் பலரின் உயிரை காத்த நேபாள இளைஞர் உடல் 2 ஆண்டுகளுக்கு பிறகு சடலமாக மீட்பு!
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலரின் உயிரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர் பிபின் ஜோஷியின் உடல், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2023 செப்டம்பரில் கிபுட்ஸ் அலுமிமில் விவசாய ஆராய்ச்சிக்காக 16 மாணவர்களுடன் சென்ற ஜோஷி, ஹமாஸ் தாக்குதல் நடைபெற்ற அக்டோபர் 7 அன்று அங்கிருந்தார். துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுகள் மத்தியில் மாணவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. அப்போது இரண்டாவது வெடிகுண்டை துரிதமாக எடுத்து வெளியே எறிந்த ஜோஷி, பலரின் உயிரைக் காப்பாற்றினார்.

ஆனால் பின்னர் அவர் ஹமாஸ் படையினரால் சிறைபிடிக்கப்பட்டார். 2 ஆண்டுகளாக தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் அவரது உடல் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற அக்டோபர் 26 அன்று பிபின் ஜோஷி 25வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
