தமிழகத்தில் புதிய புயல் சின்னம்... வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசைமாற்றம் பெற்று வலுவிழந்த நிலையில், புதிய தாழ்வு மண்டலம் உருவாகும் சாத்தியம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 8.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளது. இது தற்போது மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடலோரப்பகுதிகளுக்கு அருகில் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

இதனுடன், தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் மத்தியகிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என ஆய்வாளர்கள் கூறினர்.
இதன் விளைவாக கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு ஏற்பட்டு, வரும் நவம்பர் 7ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26-27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
