உஷார்... வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழை அலெர்ட்!!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

வட மேற்கு வங்க கடலில்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தற்போது வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் மேலடுக்கு சுழற்சியினால் ஏற்படும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியினால் ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத்  மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.செப்டம்பர் 17ம் தேதி முதல்  குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம்

இதனால்   தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, தெற்கு ஜார்க்கண்ட் நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்
இதன் காரணமாக ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web