ஊட்டியில் மின்சார வாகனங்களுக்கு புதிய சார்ஜிங் வசதி !

 
சார்ஜ்
 

பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க, மின்சார வாகனங்களின் (எலக்ட்ரிக் வாகனங்கள்) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனுடன், இந்தியா முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை வேகமாக உயரும் நிலையில், சுற்றுலா தலங்களிலும் இதற்கான அடிப்படை வசதிகள் தேவை அதிகரித்துள்ளது.

அத்தகைய நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மின்சார வாகனங்களுக்கு போதுமான அளவு சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது, சுற்றுலா பயணிகளுக்கு சவாலாக இருந்தது. இதனால் எரிபொருள் நிலையங்கள் வைத்துள்ளோர் தற்போது சார்ஜிங் மையங்கள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, மின்வாரியம் சார்பில் மின்சாரம் குறைபாடு ஏற்படாமல் புதிய மின்மாற்றிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில் ஊட்டி சேரிங்கிராஸ் மற்றும் ஹில்பங்க் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதிக்காக ரூ.12 லட்சம் மதிப்பில் 63 கேவிஏ திறன் கொண்ட இரண்டு மின் மாற்றிகள் நிறுவப்பட்டன. இதை மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி, செயற்பொறியாளர் சிவகுமார் ஆகியோர் மின்னூட்டம் செய்து தொடங்கிவைத்தனர். இந்நிகழ்வில் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!