தமிழகமே எதிர்பார்ப்பு... இன்று மாலை புதிய தலைமுறை ‘சக்தி விருதுகள் 2024’ யார் யாருக்கு விருதுகள்... ஓர் பார்வை!

 
சக்தி விருதுகள்

 

‘அவார்டு ஃபங்ஷன் போறேன்’ என்று ஸ்டைலாக சொல்லி, சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாய் பங்கேற்பதிலும், தொலைக்காட்சிகளில் திரையுலகமே திரண்டு வந்ததைப் பார்த்து மகிழ்வதுமாய் இருக்கும் ரசிகர்களை சமூகத்தின் இன்னொரு பக்கத்தை நோக்கி பார்வையைத் திருப்ப வைத்திருக்கிற புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ஒரு சபாஷ்.

சக்தி விருதுகள்

என்ன விருது தரலாம்... யாருக்கு விருது கொடுக்கலாம் என்று டிஆர்பி ரேட்டிங் குறித்த எந்த கவலையுமில்லாமல் நிஜ சாதனையாளர்களுக்கு, தமிழகத்தின் குறுக்கும் நெடுக்குமாக உழைக்கும் வர்க்கத்தினருக்கு நிஜமாகவே சமூகத்திற்கு பங்களித்த பெண் சாதனையாளர்களைத் தேடிப் பிடித்து ஒவ்வொரு வருடமும் விருது வழங்கி கெளரவிக்கிறார்கள். இன்னும் பல பெண்கள் சாதனையாளர்களாக திகழாவிட்டாலும், சமூகத்திற்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர உத்வேகமாக இருக்கும் விருது நிகழ்ச்சி ரசிகர்களிடையே... இல்லையில்லை... தமிழக மக்களிடையே பரவலாக சென்று சேர்ந்திருக்கிறது.

சக்தி விருதுகள்
சாதனை தமிழர்களை கடந்த 12 ஆண்டுகளாக வெளிச்சம் பாய்ச்சி அடையாளம் காட்டி, கெளரவித்து வருகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இன்று மாலை சென்னை நந்தம்பாக்கம் உலக வர்த்தக மையத்தில் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 8ம் தேதி புதிய தலைமுறை சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இன்று மாலை விருது நிகழ்ச்சியில், தலைமை, திறமை, துணிவு, புலமை, கருணை, வாழ்நாள் சாதனை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த பிரிவுகளின் கீழ் விருது பெறப் போகும் விருதாளர்கள் யார் யார் என்கிற ஆவல் தமிழர்களிடையே எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web