மாமனார் வீட்டு விருந்தில் இறால் சாப்பிட்ட புது மாப்பிள்ளை மரணம்!

 
இறால் இறால்

விழுப்புரம் மாவட்டத்தில், மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை, உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் சீனிவாசாநகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சீவ்ராஜ்(28). என்ஜினீயரான இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், விழுப்புரம் அருகே கோலியனூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கோலியனூர் கூட்டுரோட்டில் உள்ள மாமனார் வீட்டிற்கு சஞ்சீவ்ராஜ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு விருந்துக்கு சென்றார்.

இறால்

மாமனார் வீட்டில் இரவு அவருக்கு இறால் உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது. அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சீவ்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இறால்

இதையறிந்த உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து சஞ்சீவ்ராஜின் தாய் கல்யாணி வளவனூர் காவல் நிலையத்தில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இறால் உணவு சாப்பிட்டு புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?